சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் புதிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். புதிய அமைச்சர்களாக பதவியேற்ற செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறையும், கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறையும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மை நலத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.