செங்கல்பட்டு: தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஸ்ரீ பெரும்பதூர் |

செங்கல்பட்டு: தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலையத்தில், வெடிகுண்டு வெடிக்கும் என, நேற்று காலை டிக்கெட் கவுன்டர் அருகே, வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் ஹிந்தியில் பேசியதாக, குமார் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலின்படி தாம்பரம் போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் டிக்கெட் கவுன்டர், அலுவலகம், பிளாட்பாரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். இதில், அது புரளி என தெரிந்தது. இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு