ஈரோடு அருகே ஜான் என்கிற ரவுடி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சித்தோடு அருகே சேலத்தை சேர்ந்த ஜான் தனது மனைவியுடன் காரில் சென்றபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 8 பேர் கொண்ட கும்பம் ரவுடி ஜானின் காரை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. ஜான் கொலை தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். தப்பிடியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.