கீழ் மருவத்தூர் ஊராட்சியில் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் கீழ் மருவத்தூர் ஊராட்சியில் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் நடைபெற்றது. இதில்
சத்தான உணவு, தரமான உணவு, தொற்று நோய்கள் வராமல் தடுக்கும் உணவுகள் குறித்தும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சி கட்டாயம் தேவை என்பதை குறித்தும், அன்றாட உணவுகளில் உப்பு சக்கரை எண்ணெய் உள்ளிட்டவை குறைத்து சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் , சத்து குறைபாடுகள் போக்குவதற்கு சரிவூட்டப்பட்ட உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது குறித்தும் பங்காரு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வெங்கடேசன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மதுராந்தகம் சுஷ்மிதா, சித்தாமூர் ஈஸ்வரி, திருக்கழுக்குன்றம் பிரசாத், உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.