40 வயது அரசு ஆசிரியர் ஒருவர் 24 வயது பெண்ணை திருமணம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த அளவு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்த போதிலும், மணமகள் 'தார் கமர் ராஜாஜி' என்ற போஜ்புரி பாடலுக்கு பிரமாண்டமான மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடினார். இது தொடர்பான காணொளியை அங்கிருந்தவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.