Ducati India நிறுவனம் ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கின் விலை ரூ. 9.97 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி அறிமுகப்படுத்திய பைக்குகளில் இது மிகவும் விலை குறைவான பைக் என கூறப்படுகிறது. இந்த பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. முன்னதாக டுகாட்டி நிறுவனம் தனது டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக் ரூ.21.78 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.