திருப்போரூர் சார் பதிவகத்திலிருந்து சுற்றியுள்ள ஆறு கிராமங்களை கேளம்பாக்கத்தில் புதியதாக சார்பதிவாளர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசை அதை தடுக்க வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளரிடம் கோரிக்கை மனு.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது திருப்போரூர் சுற்றியுள்ள 55 கிராமங்களை உள்ளடக்கிய கிராமங்களில் இருந்து திருமணப்பதிவு பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர் ஆனால் தமிழக அரசு திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்திலும் நாவலூரிலும் புதியதாக சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது அதற்கு திருப்போரூர் அருகே மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுதாவூர், வடபொருந்தவாக்கம் ஆமூர், பையனூர் கருங்குழிபள்ளம் சாலவாங்குப்பம் கிருஷ்ணன் காரனை நெம்மேலி பட்டிபுலம் உள்ளிட்ட கிராமங்களை பிரித்து கேளம்பாக்கம் சார்பதிவகத்தில் சேர்ப்பதை கண்டித்து அனைத்துக் அரசியல் கட்சியின் சார்பில் திருப்போரூர் சார் பதிவாளரிடம் அலுவலகத்தை மாற்றக்கூடாது என கோரிக்கை மனுவினை வழங்கினர் பேரணியாக செல்ல காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் நேராக சார் பதிவாளரிடத்தில் மனுவினை வழங்கினர்.