சிவில் துறையின் சார்பாக செயற்கை நுண்ணறிவு பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி பொறியல் கல்லூரியில் உள்ள சிவில் துறையின் சார்பாக
செயற்கை நுண்ணறிவு பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி
கல்லூரியின் தாளாளர் கோ. ப. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் வாசுகி , மாலதி மற்றும் ஹெலன் சாந்தி ஆகியோர் பொறியியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திய தாக்கத்தினை பற்றியும் மற்றும் கட்டுமான துறைகளில் அதனுடைய பயன்பாடுகள் பற்றியும் செய்முறை விளக்கத்தின் மூலம் எடுத்துரைத்தனர்
இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டில் உள்ள 25க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.