கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் வாலிபர் ஒருவரை மற்றொரு வாலிபர் சுத்தியலால் தாக்கி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பானது. இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், வாலிபர்கள் 2 பேரும் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து கலபுரகி புறநகர் பகுதியை சேர்ந்த சச்சின் (வயது 30), சாய்பன்னா (32) என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.