மத்திய அரசின் கவனம் இருக்கும் வகையில்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மனு அளித்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக
இபிஎஸ் 95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ஐந்தாயிரம் என உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைப்பதை உறுதி செய்து அந்தத் தொகையை விலைவாசி புள்ளியுடன் இணைக்க வேண்டும் என்றும் பொது சொத்துக்களை விற்று பணமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் காப்பீடு மற்றும் நிதி துறைகளில் 100% அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்றும் அரசுத் திட்டங்களை செயல்படுத்தும் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்பை அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலன்களை பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட அமைப்பாளர் நாராயணன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.