மதுரை மாநகரில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டினாலோ அல்லது வாகன விபத்தை ஏற்படுத்தினாலோ வாகன ஓட்டுனர் மீது அபராத தொகை விதிக்கப்படுவதுடன் சட்டப்படியான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிவேகமாக ஆட்டோவை ஓட்டி வந்த விஜய் என்பவர் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.