ஈரோடு கொலை சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “ஈரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ஜான் என்பவர் மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த கொலை நடந்துள்ளது. தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை” என தெரிவித்துள்ளார்.