திருக்கழுக்குன்றத்தில் திமுக சார்பில் பொதுஉறுப்பினர் கூட்டம்

66பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை தந்தார். கொத்திமங்கலம் புறவழி சாலையிலிருந்து ரோட்சோவில் 2 கிலோ மீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்று இருபுறமும் திரண்டிருந்த பொது மக்களிடம் மனுக்கள் வாங்கினார். திருக்கழுக்குன்றம் பேருராட்சி கழக செயலாளரும், பேருராட்சி தலைவருமான யுவராஜ் ஏற்பாட்டில் வார்டு செயலாளர்கள் - நிர்வாகிகள் என தமிழ்நாடு முதல்வருக்கு சிறப்பான வரவேற்ப்பளித்தனர். வரவேற்ப்பை கண்டு பூரிப்படைந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்பான வரவேற்ப்பளித்ததை பாராட்டினார். இதையடுத்து அவரது வருகையையொட்டி இரவும் பகலும் அயராது பாடுபட்ட நிர்வாகிகளை பாராட்டும் விதமாக திருக்கழுக்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சி கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி மன்ற துணை தலைவர் அருள்மணி, பேருராட்சி கழக துணை செயலாளர்கள் இளங்கோ, சரவணன், தெளலத் பீவி, மாவட்ட பிரதிநிதிகள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, பழனி, மற்றும் 18 வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் பேருராட்சி செயலாளர் நன்றி கூறி சால்வை அணிவித்து பிரியாணி விருந்தளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி