புனேவில் உள்ள ஹின்ஜேவாடி ஐடி பூங்கா அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஐடி ஊழியர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்தில், திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், செய்வதறியாமல் பயந்துபோன ஊழியர்கள், பேருந்தின் பின்பக்க கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவை திறக்க முடியாததால், ஊழியர்கள் பேருந்து உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதில், 4 பேர் இறந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.