பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் பலி

75பார்த்தது
பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் பலி
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில், சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மோகனூரைச் சேர்ந்த செல்வமணி என்ற பக்த, சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், கோயில் நிர்வாகிகள் ஆகியோர் சேர்ந்து செல்வமணியை பழனி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி