நாமக்கல் மாவட்டம் அருகே மதுபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் மணிகண்டனுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மேலும், மறுநாள் காவல் நிலையம் வருமாறு போலீசார் கூறியுள்ளனர். இதனால், பயந்துபோன மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இளைஞரின் சாவுக்கு போலீசாரே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையம் முன்பு இளைஞர் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.