தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் - சைதன்யபுரி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 7 பெண் குழந்தைகள், 5 ஆண் குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. ஒரு ஆண் குழந்தையை தவிர மற்ற அனைவரும் ஒரு வயதுக்குட்பட்டவர்கள். தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலத்துறையின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் கடத்தப்பட்டதா?, விற்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.