
டெல்லி கேபிடல்ஸ் அணி த்ரில் வெற்றி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகெதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய DC அணியின் பேட்டர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். DC அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவையான நிலையில், 19.3 ஓவரில் 211 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்ற அஷிதோஸ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.