ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தொண்டையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். பெண்ணின் அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து ஒரு செல்போன் மற்றும் கைப்பை (Hand Bag) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.