தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை 'பூஜ்ஜியம்'. இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதத்திற்கு 65 ஆசிரியர்களும் உள்ளனர் என நாடாளுமன்றத்தில் எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் இவை தேசிய மொழி என வரையறுக்கப்பட்டுள்ளதா? பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா? இதன் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள்?" என கனிமொழி காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.