ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொடுமூர் விடுதியில், 6ம் வகுப்பு பள்ளி மாணவர்களை, 9ம் வகுப்பு பள்ளி மாணவர் அடித்துள்ளார். தனது பேச்சைக் கேட்காததற்காக, அந்த சிறுவர்களை பெல்ட்டால் கொடூரமாக அடித்துள்ளார். வலி தாங்காமல் சிறுவர்கள் கதறிய நிலையிலும், கொலை வெறியோடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.