உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் 28 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தொண்டரான இவர் காலை நேரத்தில் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நொடிகளில் அவரது உயிர் பிரிந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது