கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் மவுசு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய சந்தைகளில் புளூ பெர்ரி, ஆரஞ்சு, லெமன், ஜிஞ்சர் என பலவகைகளில் கோலி சோடாக்கள் தற்போது விற்கப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகளிலும் கோலி சோடாவுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. சர்வதேச சந்தைகளில் கோலி சோடா மீண்டும் ஒரு வலுவான இடத்தைப் பிடித்திருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.