இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இருவரும் நேரில் ஆஜராகி மனமுவந்து பிரிவதாக தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட இருவரும், கச்சேரியில் ஒன்றாக பாடுவது, ஜிவி இசையில் சைந்தவி பாடுவது என நண்பர்களாக இருந்து வருகின்றனர்.