
கோபிச்செட்டிப்பாளையம் அருகே டிரைவர் தற்கொலை
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூர் வேமாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (57). டிரைவர். இவரது மனைவி வசந்தி கடந்த 10 வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற நிலையில் பாலுசாமி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த பாலுசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.