தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸின் உரிமையாளர் அருண் விஷ்வா, "எஸ்.யு. அருண்குமார் என்ற பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது விளம்பரத்திற்காக போடப்பட்ட ட்வீட் அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.