சிதம்பரம் அருகே கடற்கரையில் மிதவை போன்ற மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனைப் பார்த்த மீனவர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து போலீசார், மற்றும் கடலோர காவல்படையினர், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த மர்மப் பொருளை ஆய்வு செய்தனர். பெரிய பந்து போன்ற அந்த பொருளில் மாலத்தீவு என்று அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள் தெரிவதால் கடல் எல்லை பகுதிக்கு பயன்படுத்தப்படும் மிதவை பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.