அமெரிக்காவில் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதற்காக ஹண்டர் - அமி பாரோன் இணை ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து திருமணம் செய்துள்ளனர். புகைப்படக் கலைஞர், 20 பேருக்கு உணவு, உடை ஆகியவற்றிற்காக $1000 செலவு செய்த நிலையில், $10,000 பணத்தை சேமித்துள்ளனர். இந்த பணத்தை வைத்து தேன் நிலவு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர். தம்பதியின் இச்செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.