சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அலுவலகம் முன் நடிகை சோனா திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது சொந்த வாழ்க்கை பற்றி அவரே இயக்கிய பயோபிக் படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை பிடுங்கி வைத்துக்கொண்டு தரவில்லை எனக் கூறி அவர் தரையில் அமர்ந்து தர்ணா செய்துவருகிறார். மேலும் தன்னை ஒரு மேனேஜர் ஏமாற்றிவிட்டதார் என்றும், யாரும் உதவாமல் ஒதுங்கிக் கொள்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.