சில மாதங்களாக கடும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தைகள், கடந்த ஒரு வாரமாக மேல் நோக்கி கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. இந்நிலையில், இன்றைய (மார்ச்.24)வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,658 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,984 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வங்கிகளின் பங்கு விலைகள் இன்று கணிசமாக உயர்ந்தன.