குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை இஸ்லாமிய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்டாலின், “எந்த கூச்சமும் இல்லாமல் இஃப்தார் நோன்பில் இபிஎஸ் பங்கேற்கிறார். ஆபத்து வரும் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு, அந்த குற்ற உணர்ச்சியே இல்லாமல் இஃப்தார் நோன்பில் கலந்துகொள்கிறார் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.