கார் ஏறி இறங்கியதில் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலி

61பார்த்தது
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த பக்தர்கள் இரண்டு பேர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பைக்கில் சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி உரசியதில், இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது ஏறி இறங்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி