ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 50 ஜிபி வரை ஏஐ (AI) மூலம் இயங்கும் கிளவுட் ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த இலவச சேவையானது ரூ.299 மற்றும் அதற்கு மேல் தொடங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கும் மற்றும் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் கிடைக்கிறது. ஜியோவின் இந்த நடவடிக்கை கூகுளுக்கும், ஒன்ட்ரைவ் மற்றும் அஸூர் ஸ்டோரேஜ் போன்ற பல கிளவுட் ஸ்டோரேஜ் விருப்பங்களை வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.