மகாராஷ்டிரா மாநிலத்தில் பஸ் ஓட்டுநர் ஒருவர் செல்போனில் IPL கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டே பஸ் ஓட்டியுள்ளார். பஸ்ஸில் இருந்த பயணி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்த நிலையில் வீடியோ வைரலானது. அமைச்சரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். மும்பை-புனே வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்ஸில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் போனில் IPL பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டுவதாக புகார் எழுந்துள்ளது.