மொடக்குறிச்சி - Modakurichi

ஈரோடு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நள்ளிரவில் மொடக்குறிச்சி சாலையில் உள்ள முத்துக்கவுண்டன் பாளையத்தில் இருந்து தனது காரில் வேகமாக நஞ்சை ஊத்துக்குளியை நோக்கி சென்று உள்ளார்.  அப்போது சின்னியம்பாளையம் அருகே வந்த போது கார் எதிரே பாய்லர் கம்பெனிக்கு விறகு எடுத்துக்கொண்டு சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் சேதமடைந்து மூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా