தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள திட்ட அட்டவணையில், "நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். 1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.