மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில், கடந்த 2 வருடங்களாக கொள்ளையடித்து வந்த இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, வீட்டின் கதவை உடைத்து இரண்டு பேர் கொள்ளையடித்து வந்துள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும்போது, வெறும் டவுசர் மட்டும் அணிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், அந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்