ஈரோடு நகரம் - Erode City

ஈரோட்டில் ஓடும் காரில் தீ விபத்து

ஈரோடு சூளை பகுதியில் பேன்சி கடை வைத்திருப்பவர் சிவக்குமார் (45). இன்று இரவு 9 மணியளவில் தனது காரில் வீரப்பன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சத்தி சாலை பாரதி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது காரின் முன்புற பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.  இதைப்பார்த்து சிவக்குமார் சுதாரித்து காரில் இருந்து இறங்கினார். அதற்குள் கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. கார் தீப்பற்றி எரிவதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக குடம், பக்கெட்களில் தண்ணீரை கொண்டு வந்து காரில் ஊற்றி தீயை அணைத்தனர். அதன் பின் ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு வந்து மேலும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். தீ விபத்தில் காரின் முன்புற பகுதி எரிந்து நாசமானது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా