
மகளிர் கிரிக்கெட்; இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (டிச.5) நடக்கிறது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 9.50 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது..