இந்திர ஏகாதசி தினத்தில் கடைபிடிக்க வேண்டியவை
இந்திர ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும், பிறகு பித்ருக்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட்ட பிறகு, விரதத்தை துவக்க வேண்டும். பெருமாளின் படம் அல்லது சிலை வைத்து பூக்கள், துளசி சாற்றி, நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு. இந்திர ஏகாதசி விரத கதைகளை படிப்பது, பெருமாளின் மந்திரங்களை சொல்வது ஆகியவற்றை செய்த பிறகு, ஆரத்தி காட்டி வணங்கலாம்.