வெறிநாய்க்கடியால் ஏற்படும் வைரஸ் பாதிப்பு தான் ரேபிஸ் எனப்படுகிறது. ரேபிஸ் நோயை பொறுத்தவரை, இதற்கு சிகிச்சையே கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இதற்கு எதிரான தடுப்பூசி உள்ளது. அந்த தடுப்பூசியை, நாய் பிறந்து முதல் 100 நாட்களுக்குள் போட்டுவிட்டால், அந்த நாய் பிற்காலத்தில் ரேபிஸால் தாக்கப்படாமல் இருக்கும். ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி வந்து ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.