பிளிப்கார்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள "பிக் பில்லியன் டேஸ் சேல்" ப்ரோமோஷனல் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த அனிமேஷன் வீடியோவில் கணவர்கள் சோம்பேறிகள், துரதிஷ்டம் பிடித்தவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களிலும், ஆண்கள் நலச் சங்கமும் கண்டனங்களை தெரிவித்தது. இதனையடுத்து, அந்த வீடியோவை நீக்கிய பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.