இந்த ஆண்டு இந்திர ஏகாதசி செப்டம்பர் 27ம் தேதி மாலை 05.35 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 28ம் தேதி மாலை 06.09 வரை உள்ளது. இந்த நேரத்தில் சில குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி பூஜை செய்து வழிபட்டால் பித்ருக்களின் ஆசியும், பெருமாளின் அருளும் கிடைக்கும். இந்திர ஏகாதசி அன்று நாம் விரதம் இருந்து வழிபடுவதால் நமக்கு மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு மோட்சம் கிடைக்கும்.