
வாணியம்பாடி ஹோட்டலில் புகுந்து உரிமையாளர் மீது தாக்குதல்
வாணியம்பாடியில் ஓட்டலில் புகுந்து உரிமையாளர் மீது தாக்குதல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோனிஷா. இவர்கள் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கணவனுடன் சண்டையிட்டுக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஹோட்டலுக்கு வந்த 10 க்கும் மேற்பட்ட கும்பல் கார்த்திக் மற்றும் அவரது தம்பி சீனி ஆகியோரை வேலை செய்துகொண்டிருந்தபோது ஹோட்டலில் புகுந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இரண்டு பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹோட்டலில் புகுந்து தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.