திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் (இன்று பிப்ரவரி 12 காலை) சென்னையில் இருந்து பெங்களூருக்கு மருந்துகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஆம்பூர் அடுத்த சோலூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. யாருக்கும் எந்த ஒரு காயமும் இல்லை. தகவல் அறிந்து தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்களும், ஆம்பூர் தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்து பாதிப்பைச் சரிசெய்யவும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.