வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பேசஞ்சர் ரயில் இன்ஜின் பழுது காரணமாக ரயில் நிறுத்தம். பயணிகள் அவதி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய பேசஞ்சர் ரயில் நேற்று காலை சுமார் 7. 15 மணிக்கு ஜோலார்பேட்டை ரயி்நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அப்போது ரயில் இன்ஜினில் லேசான புகை ஏற்பட்டதால் மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக ரயில் புறப்பட்டது. அப்போது புகை ஏற்பட்ட இஞ்சினை பேசஞ்சர் ரயிலில் இணைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கு வந்த போது மீண்டும் பழுதான இன்ஜினில் அதிக அளவு புகை வந்ததால் ரயிலை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இன்ஜினில் ஏற்பட்ட புகை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டதால்
கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்களும், வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.