மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசிற்கு சேர வேண்டிய ரூ.5,000 கோடி நிதி உதவியை மத்திய அரசு மறுத்துள்ளது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்மொழி கொள்கை தேவையற்ற ஒன்று, இதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என்று அவர் சாடியுள்ளார்.