திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நீயூ டவுன் பகுதியைச் சேர்ந்த சலீம் பாஷா மகன் கலிம்முல்லா (38) இவர் 24 வருட காலமாக சமோசா விற்பனை செய்து வருகிறார். மேலும் எருது விடும் திருவிழா மற்றும் திருவிழா நடைபெறும் பகுதிகளில் நடந்து சென்று சமோசா விற்பனையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் கலிம்முல்லா தனது கழுத்தில் தனது வங்கி கணக்கு எண் கொண்ட கியூஆர் கோடை மாட்டிக் கொண்டு சமோசா விற்பனையில் ஈடுபட்டார். மேலும் பணம் இல்லாமல் சமோசா வாங்கும் நபர்கள் கழுத்தில் உள்ள கியூஆர் கோடில் ஸ்கேன் செய்து தொகையை அனுப்பினர். எருது விடும் திருவிழாவில் கியூஆர் கோடு மூலம் சமோசா விற்பனை செய்த சம்பவம் அனைவரின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.