ரணிப்பேட்டை மாவட்டம் கலவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கலவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புகையிலை பொருட்கள் விற்ற வாலாஜா வீ.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வாலாஜா சிறையில் அடைத்தனர்.