வாணியம்பாடி அருகே நடைபெற்று வரும் எருது விடும் விழாவில் ஓடிய காளை ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழப்பு
ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய காளை ரயிலில் சிக்கி உயிரிழந்ததால் மாட்டின் உரிமையாளர் வேதனை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் எருது விடும் விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது காளைகள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நிலையில் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான காளை வீதியில் அவிழ்த்து விடப்பட்டு ஓடிக்கொண்டிருந்த போது தொடர்ந்து காளையை பிடிக்க முடியாமல் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் ஓடிகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சென்னை பெங்களூர் மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி சரக்கு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த காளையை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்